கேரளாவில் இன்று 5,848 பேருக்குக் கரோனா: அரசு தகவல்

By செய்திப்பிரிவு

இன்று கேரளத்தில் 5,848 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''இன்று கேரளத்தில் 5,848 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தொற்று 5,137 பேருக்கு உள்ளூர்ப் பரவல் மூலம் ஏற்பட்டுள்ளது. 613 பேருக்குத் தொற்றுக்கான ஆதாரம் கண்டறியப்படவில்லை.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 45 மருத்துவ மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் இருந்தனர். சமீபத்திய மரணங்கள் 32 என உறுதி செய்யப்பட்டன. இதனால் தொற்று இறப்பு எண்ணிக்கை 2,390 ஆக உயர்ந்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 60,503 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 65,56,713 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இன்றைய தொற்றாளர்கள் மாவட்ட வாரியாக எண்ணிக்கை:

மலப்புரம் 920, கோழிக்கோடு 688, எர்ணாகுளம் 665, கோட்டயம் 567, திருச்சூர் 536, கொல்லம் 405, பாலக்காடு 399, ஆலப்புழா 365, திருவனந்தபுரம் 288, கண்ணூர் 280, வயநாடு 258, வயநாடு 258, பத்தனம் திட்டா 208, இடுக்கி 157, காசர்கோடு 112. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 53 பேர் மாநிலத்திற்கு வெளியில் இருந்து இங்கு வந்துள்ளனர்.

உள்ளூர்த் தொடர்பு மூலம் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக எண்ணிக்கை:

மலப்புரம் 880, கோழிக்கோடு 645, எர்ணாகுளம் 509, கோட்டயம் 561, திருச்சூர் 518, கொல்லம் 400, பாலக்காடு 198, ஆலப்புழா 338, திருவனந்தபுரம் 195, கண்ணூர் 244, வயநாடு 246, பத்தனம்திட்டா 173, இடுக்கி 121, காசர்கோடு 109.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை:

திருவனந்தபுரம் 7, எர்ணாகுளம் மற்றும் கண்ணூர் 6; திருச்சூர், கோழிக்கோடு மற்றும் வயநாடு 5, பாலக்காடு 4, மலப்புரம் 3, கொல்லம் மற்றும் காசர்கோடு 2.

இன்றைய பரிசோதனையில் நோய்த்தொற்று நீங்கியவர்கள் மாவட்டவாரியான விவரம்:

திருவனந்தபுரம் 337, கொல்லம் 410, பத்தனம்திட்டா 268, ஆலப்புழா 551, கோட்டயம் 588, இடுக்கி 88, எர்ணாகுளம் 492, திருச்சூர் 590, பாலக்காடு 405, மலப்புரம் 1023, கோழிக்கோடு 1423. வயநாடு 148, கண்ணூர் 288, காசர்கோடு 172.

தற்போது 61,393 கரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், மொத்தம் 5,67,694 பேர் இதுவரை தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இப்போது மாநிலம் முழுவதும் 3,15,024 பேர் முற்றிலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் - வீடு அல்லது நிறுவன தனிமைப்படுத்தலின் கீழ் 2,99,962 மற்றும் மருத்துவமனைகளில் 15,062 பேர். 1,721 பேர் இன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு புதிய இடங்கள் ஹாட்-ஸ்பாட்களாக வரையறுக்கப்பட்டன, இரண்டு பகுதிகள் விலக்கப்பட்டதால் மாநிலத்தில் ஹாட்-ஸ்பாட்களின் எண்ணிக்கை 444 ஆக உள்ளது''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

இந்தியா

4 mins ago

தமிழகம்

21 mins ago

வாழ்வியல்

12 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

47 mins ago

சினிமா

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்