விவசாயிகள் போராட்டம் குறித்த கருத்து: கனடா தூதரை அழைத்து கடும் கண்டனம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில நாட்களுக்கு முன்பு, "விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு இந்திய அரசு செவிசாய்க்க வேண்டும். இந்தப் போராட்டத்துக்கு கனடா துணை நிற்கும்" எனக் கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு இந்தியா உடனடியாக கண்டனம் தெரிவித்தது. மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான கனடா தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியிருந்தது. இதன்படி, கனடா தூதர் வெளியறவுத் துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.

இதுகுறித்து, மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறும்போது, "இந்தியாவின் உள் விவகாரங்களில் கனடா பிரதமரும், சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலையிட்டு வருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அந்நாட்டு தூதரிடம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இனி இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், அது இந்தியா – கனடா இடையேயான உறவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவரிடம் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்