ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ‘பிஐஎஸ்’ ஹெல்மெட் மட்டுமே தயாரித்து விற்க வேண்டும்: மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு

By செய்திப்பிரிவு

இந்திய தர நிர்ணயச் சான்று (பிஐஎஸ்) பெற்ற ஹெல்மெட்களை மட்டுமே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும். அவற்றை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் தரமற்ற விலை குறைந்த ஹெல்மெட்கள் விற்பனை செய்யப்படுவது தவிர்க்கப்படும். இதனால் தரமான ஹெல்மெட்கள் விற்கப்படுவதோடு விபத்துகளில் விலை குறைந்த ஹெல்மெட்களால் உயிரிழப்பு ஏற்படுவது குறையும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தரைவழி போக்குவரத்து அமைச்சகம் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் அணிய வேண்டிய ஹெல்மெட் தரச் சான்று உத்தரவு 2020 குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்ற குழுவின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து ஹெல்மெட்களின் தரம் மற்றும் அவற்றின் பாதுகாப்புத் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த குழுவில் எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் பிற துறை வல்லுநர்களும் இடம்பெற்றனர். இக்குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் சாதாரண ஹெல்மெட்களுக்கும், பிஐஎஸ் சான்று பெற்ற ஹெல்மெட்களுக்கும் இடையே இருந்த உறுதித் தன்மை ஆய்வு செய்ததில் தரக்குறைவான ஹெல்மெட்கள் உயிருக்கு ஆபத்தாக இருப்பதை உறுதி செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்