இஸ்லாமிய படிப்புக்கான நுழைவு தேர்வில் இந்து மாணவர் முதலிடம் பிடித்து சாதனை

By செய்திப்பிரிவு

நாட்டில் இஸ்லாமிய படிப்புகளில் சேர்வதற்காக பொது நுழைவுத் தேர்வை மத்திய பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற பொது நுழைவுத் தேர்வில் இந்து சமூகத்தைச் சேர்ந்த மாணவர் சுபம் யாதவ் (21) முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்த முஸ்லிம் அல்லாத முதல் மாணவர் இவரேயாவார். டெல்லி பல்கலைக்கழகத்தில் தத்துவஇயல் பட்டதாரியான இவர் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியைச் சேர்ந்தவர்.

இதுகுறித்து சுபம் யாதவ் கூறும்போது, “இஸ்லாம் மதம் குறித்து சமூகத்தில் பல்வேறு தவறான கருத்துகள் உலா வருகின்றன. ஆனால் மிகவும் புரிந்துகொண்ட மதம் என்றால் அது முஸ்லிம் மதம் என்ற நம்பிக்கையை உடையவன் நான். முஸ்லிம் மதம் குறித்து அதிக அளவில் பயில விரும்பியே இந்த நுழைவுத் தேர்வை எழுதினேன். இரண்டு மதங்களுக்கு இடையே பாலமாக இருக்கவே நான் இஸ்லாமிய படிப்பை படிக்க விரும்புகிறேன்.

இதுமட்டுமல்லாமல் சிவில் சர்வீஸஸ் தேர்வுகளை எழுதவும் விரும்பு கிறேன். இந்தத் தேர்வுகளுக்கு இஸ்லாமிய படிப்புகள் உதவும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

7 mins ago

சினிமா

10 mins ago

வலைஞர் பக்கம்

14 mins ago

சினிமா

19 mins ago

சினிமா

24 mins ago

இந்தியா

32 mins ago

க்ரைம்

29 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்