தமிழகத்தில் திருச்சி, தூத்துக்குடி பகுதிகளுக்கு கட்டுப்பாடு; காற்று மாசு மிகவும் மோசமாக உள்ளநகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

By செய்திப்பிரிவு

காற்று மாசு மோசமாக உள்ள நகரங்களில் பட்டாசு விற்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித் துள்ளது. தமிழகத்தில் திருச்சி, தூத் துக்குடியில் பசுமை பட்டாசு களுக்கு மட்டுமே அனுமதிக்கப் படும் என கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது.

தீபாவளியை ஒட்டி நாடு முழு வதும் பட்டாசு விற்பனை அதிகரித் துள்ளது. டெல்லி, ஒடிசா, ராஜஸ் தான், சிக்கிம் உள்ளிட்ட மாநில அரசுகள் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்துள்ளன. இதனிடையே காற்று மாசு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது.

தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், நீதித் துறை உறுப்பினர் ஜே.கே.சிங், நிபுணர் குழு உறுப்பினர்கள் கார்பயால், நாகின் நந்தா ஆகி யோர் வழக்கை விசாரித்தனர்.

பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பாய தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:

கரோனா வைரஸ் என்ற இக்கட் டான காலத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறோம். காற்று மாசால் கரோனா வைரஸ் நோயாளி கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் ஆபத்து உள் ளது. இந்த நேரத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்கிறது.

தலைநகர் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் காற்று தரக் குறியீடு அபாய அளவைத் தொட்டுள்ளது. இதனால் மக்களின் உடல் நலன் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. எனவே, டெல்லி என்சிஆர் பகுதிகளில் நவம்பர் 9 முதல் 30-ம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் முழுமையான தடை விதிக்கப்படுகிறது. நாடு முழுவதும் காற்று மாசு மோசமான நிலையில் உள்ள நகரங்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும்.

பசுமை பட்டாசுகள்

இதுதவிர, காற்று மாசு அதிக மாக உள்ள நகரங்களில் பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்க வேண்டும். அந்தந்த மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள கால நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தீபாவளி, சாத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின்போது இந்த கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

காற்று மாசைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள், மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மேற் கொள்ள வேண்டும். அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், காவல் துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் துறை தலைவர்கள் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.

பட்டாசு தடையால் பொருளா தார இழப்பு ஏற்படும் என்ற வாதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எல்லாவற்றையும்விட மக்களின் உடல் நலனே முக்கியமானது. சுத்தமான காற்றை சுவாசிக்கும் உரிமை மக்களுக்கு உள்ளது. பொருளாதார நட வடிக்கைகளை காரணம் காட்டி அந்த உரிமையை யாரும் பறிக்க முடியாது.

காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் தீர்ப்பாயம் தனது அதிகாரத்தை பயன்படுத் தும். இவ்வாறு தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது.

திருச்சி, தூத்துக்குடி

தேசிய பசுமை தீர்ப்பாய வழக்கு விசாரணையின்போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் காற்று மாசு அதிகமாக உள்ள 122 நகரங்களின் பட்டியல் தாக் கல் செய்யப்பட்டது. அந்த பட்டிய லில் தமிழகத்தின் திருச்சி, தூத் துக்குடி நகரங்கள் இடம்பெற்றுள் ளன. தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி இந்த இரு நகரங் களிலும் பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்க வேண்டும்.

காற்று தரக் குறியீடு 50 புள்ளிகள் வரை இருந்தால் பாதுகாப்பானது. 51-100 மிதமானது. 101-150 நோயாளிகளின் உடல்நலத்துக்கு தீங்கானது. 151-200 ஆரோக்கிய மானவர்களுக்கும் தீங்கு விளை விக்கும். 201-300 அதிக தீங்கினை ஏற்படுத்தும். 301-500 புள்ளிகள் மிக அபாயகரமானதாகும்.

டெல்லியில் தடை

டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறும் போது, "நவம்பர் 9 முதல் 30-ம் தேதி வரை டெல்லியில் பட்டாசு விற்க, வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது. தடையை மீறி யாராவது பட்டாசு வெடித்தால் சட்ட விதிகளின்படி 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 mins ago

இணைப்பிதழ்கள்

16 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

45 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்