பணியில் அலட்சியமாக இருந்ததாக புகார்: டெல்லி பல்கலை. துணைவேந்தர் இடைநீக்கம்

By செய்திப்பிரிவு

டெல்லி பல்கலைக்கழக (டியு) துணைவேந்தர் பணியில் அலட்சியமாக இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சில மாதங்களுக்கு முன்பு யோகேஷ் தியாகி நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில், அவர் மீது தவறான நடத்தை, பணியில் அலட்சியமாக இருத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபற்றி விசாரணை நடத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம், மத்திய கல்வித்துறை அமைச்சகம் அனுமதி கோரியிருந்தது. இந்நிலையில், யோகேஷ் தியாகி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் நேற்று அறிவித்தது. மேலும் யோகேஷ் மீதான விசாரணை முடியும் வரை அவரை இடைநீக்கம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் யோகேஷ் தியாகி, உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

30 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்