ஜன.11ம் தேதியே வூஹான் கரோனா வைரஸ் பற்றி இந்தியாவுக்கு உலகச் சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது: ஆர்டிஐ தகவல்

By செய்திப்பிரிவு

சீனாவின் வூஹான் நகரில் கரோனா என்ற ஒரு வைரஸ் பரவி வருகிறது என்ற தகவலை உலகச் சுகாதார அமைப்பு ஜனவரி 11ம் தேதியே இந்தியாவுக்கு தெரிவித்தது என்ற தகவல் தற்போது தகவலுரிமை சட்ட விசாரிப்பில் தெரிய வந்துள்ளது.

அதாவது டிச12-29 தேதிகளிலேயே சீனாவின் வூஹானில் இந்த வைரஸ் பீடித்துள்ள தகவலை உலகச் சுகாதார அமைப்பு இந்தியாவுக்கு ஜனவரி 11ம் தேதி தெரிவித்ததாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஆர்டிஐ தகவலில், “சீனாவுடனான வாணிப மற்றும் பயண கட்டுப்பாடுகள் குறித்து உலகச் சுகாதார அமைப்பு இந்தியவுக்கு அறிவுறுத்தியது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆர்டிஐ விசாரிப்புக்கு பதில் அளித்த தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கும் போது, உலகச் சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங், மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தனுக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தது. இது அனுப்பப்பட்ட தேதி ஜனவரி 11, 2020. இதில் வூஹானில் பரவி வரும் கரோனா வைரஸ் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் ஜனவரி 30ம் தேதி முதல் கரோனா வைரஸ் தொற்று கண்டுப்பிடிக்கப்பட்டது. இன்று இது 77 லட்சம் பாதிப்பையும் 1.17 லட்சம் பலிகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மார்ச் 21ம் தேதி முழு ஊரடங்கை நாடு முழுதும் அறிவித்தது. மார்ச் 22ம் தேதி முழு பயணத்தடை விதிக்கப்பட்டது.

ஆனால் உலகச் சுகாதார அமைப்பின் மண்டல இயக்குநர் அனுப்பிய எச்சரிக்கை மெயிலில் மனிதரிடத்திலிருந்து மனிதர்களுக்குப் பரவுவதற்கான ஆதாரம் முதற்கட்ட விசாரணையில் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்