கரோனா முன் பணமாக 44 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.11,500 கோடி வழங்கிய இபிஎஃப்ஓ

By செய்திப்பிரிவு

கரோனா முன் பணம் தொடர்பான மனுக்களுக்கு 44 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.11,500 கோடி தொகையை இபிஎஃப்ஓ வழங்கியதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்தார்

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

கரோனா முண்பணம் தொடர்பான மனுக்களுக்கு, இதற்கு முன் இல்லாத வகையில், 24 மணி நேரத்துக்குள் முடித்து வைத்து சிறப்பாக பணியாற்றியதற்காக, மேற்கு தில்லியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (இபிஎப்ஓ) ஊழியர்களை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வர் இன்று கவுரப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சந்தோஷ் கங்வர், “கடந்த 175 நாட்களாக, தொழிலாளர்களின் கொவிட் முன்பணம் தொடர்பான மனுக்கள் 24 மணி நேரத்துக்குள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். பணி நேரத்துக்கு அப்பாலும், இபிஎப்ஓ ஊழியர்கள் பணியாற்றி, 3.25 லட்சம் சந்தாதாரர்களுக்கு, ரூ.750 கோடி பணம் விநியோகித்துள்ளனர்.

வழக்கமாக இபிஎப்ஓ விண்ணப்பங்களை 3 நாட்களுக்குள் முடிக்க வேண்டும், ஆனால் இந்த அலுவலகம், 90 சதவீத விண்ணப்பங்களை, 24 மணி நேரத்துக்குள் முடித்து வைத்துள்ளது.

இதேபோல் நாடு முழுவதும், இபிஎப்ஓ அலுவலகங்கள் வெளிப்படை தன்மையுடன், திறம்படவும் செயல்பட வேண்டும்

இயல்பான பணிகளே சிரமமாக இருந்த போது, நாடு முழுவதும் உள்ள இபிஎப்ஓ அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 44 லட்சம் கொவிட் முன்பண விண்ணப்பங்களை கடந்த அக்டோபர் 15ம் தேதி வரை பரிசீலனை செய்து, ரூ.11,500 கோடி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது. கோவிட் தொற்று மற்றும் முடக்க காலத்தில் இது மிகவும் சவாலான பணி என்று, அமைச்சர் சந்தோஷ் கங்வர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

29 mins ago

ஜோதிடம்

39 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்