மைசூர் பல்கலைக்கழக நூற்றாண்டு பட்டமளிப்பு விழா: பிரதமர் மோடி உரை

By செய்திப்பிரிவு

மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

1916ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி, மைசூர் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இது நாட்டின் ஆறாவது மற்றும் கர்நாடக மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகமாகும். 'அறிவுக்கு நிகர் எதுவுமில்லை' என்பதே இந்த பல்கலைக்கழகத்தின் குறிக்கோள். மைசூர் சமஸ்தானத்தின் மகாராஜாவான நல்வாடி கிருஷ்ணராஜ வாடியார் மற்றும் திவான் சர் எம்.வீ. விஸ்வேஸ்வரையா ஆகியோரால் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கர்நாடக மாநில ஆளுநர் மற்றும் பல்கலைக்கழகத்தின் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். சிண்டிகேட் மற்றும் கல்வி குழுமத்தின் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மேல்சபை உறுப்பினர்கள், மாவட்ட அதிகாரிகள், பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாகக் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்