ஜார்க்கண்டில் ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 2 முறை ரூ.10-க்கு வேட்டி, சேலை

By செய்திப்பிரிவு

ஜார்க்கண்ட் மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு இருமுறை ரூ.10 மானிய விலையில் வேட்டி அல்லது லுங்கி மற்றும் சேலை வழங்க முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “ஜார்க்கண்டில் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து குடும்பங்களுக்கும் 6 மாதங்களுக்கு ஒரு முறை துணிகள் வழங்கப்படும். ரூ.10 மானிய விலையில் ஒரு வேட்டி அல்லது ஒரு லுங்கி வழங்கப்படும். இதுபோல் ரூ.10-க்கு ஒரு சேலை வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே துணி வழங்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கப்பட உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, ஏழைகளுக்கு மானிய விலையில் வேட்டி, சேலை வழங்கப்படும் என சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்