பாஜக கூட்டணியில் பிளவா?- பாஸ்வான் கட்சி மறுப்பு

By ஐஏஎன்எஸ்

தேசிய ஜனநாயக கூட்டணியில் பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதால் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனை லோக் ஜனசக்தி மறுத்துள்ளது. கூட்டணியில் பிளவு ஏதுமில்லை என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் நேற்று டெல்லியில் கூறும்போது, “ஏற்கெனவே கூறியபடி எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாததால் எங்கள் தொண்டர்கள் தங்கள் ஏமாற்றத்தை தெரிவித்தனர்.

கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சிக்கு தரப்படும் தொகுதிகளால் நாங்கள் மனம் உடைந்துவிடவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏதுமில்லை. கூட்டணி ஒற்றுமையாக உள்ளது” என்றார்.

லோன் ஜனசக்திக்கு 41 - 42 தொகுதிகள் தருவதாக பாஜக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகவும் ஆனால் 40 தொகுதிகள் மட்டுமே கொடுத்துள்ளதால் பாஸ்வான் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

எதிர்வரும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கடந்த திங்கள்கிழமை அறிவித்தார்.

இதன்படி பாஜக 160 இடங் களிலும், லோக் ஜனசக்தி 40, உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி 23, ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 20 இடங்களில் போட்டியிடு கின்றன. இதுதவிர பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட சில தொகுதிகளில் மாஞ்சியின் கட்சியினர் போட்டியிட உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

31 mins ago

சினிமா

47 mins ago

சினிமா

56 mins ago

சினிமா

59 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

57 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்