கரோனா; 10 மாநிலங்களில் 75 சதவீத பாதிப்பு

By செய்திப்பிரிவு

கோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் 75 சதவீதம், 10 மாநிலங்களில் உள்ளன.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

தொடர்ந்து ஆறாவது நாளாக, புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைபவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 86,508 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் 75 சதவீதம் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ளன

மகாராஷ்டிராவில் மட்டுமே 21 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஆந்திப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிலும் அதிக அளவில் புதிய தொற்றுகள் (முறையே 7,000 மற்றும் 6,000) கண்டறியப்பட்டுள்ளன.

கோவிட்-19 தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,129 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 83% பேர் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அடங்குவர்.

மகாராஷ்டிராவில் 479 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 87 பேரும், பஞ்சாப்பில் 64 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்