ஆர்பிஐ கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்: மசோதா நிறைவேற்றம்

By செய்திப்பிரிவு

கூட்டுறவு வங்கிகள் அனைத்தை யும் ரிசர்வ் வங்கியின் கட்டுப் பாட்டில் கொண்டு வருவது தொடர்பான மசோதா மக்களவை யில் நேற்று நிறைவேறியது.

பொதுமக்களின் சேமிப் புக்கு உத்திரவாதம் அளிக்கும் விதமாக வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் கூட்டுறவு வங்கி களை ரிசர்வ் வங்கி கண்காணிப் பின்கீழ் கொண்டுவர புதிய மசோதா வழிவகை செய்துள்ளது. இதன் மூலம் கடந்த ஜூன் 26-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் அமலாக வழியேற் பட்டுள்ளது.

இதன்படி கூட்டுறவு சங்க பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் இனி ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் வரும். இந்த மசோதாவுக்கு பதிலளித்துப் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுமக்களின் சேமிப்புத் தொகைக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்பதுதான் நோக்கமே தவிர கூட்டுறவு சங்க பதிவாளரின் அதிகாரங்களை பறிக்கும் நோக்கமல்ல என்றார். கூட்டுறவு வங்கிகளின் செயல் பாடுகள் இனி ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி நடைபெறும் என்று அவர் விளக்கமளித்தார்.

நாட்டில் மொத்தம் 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பன்முக மாநில கூட் டுறவு வங்கிகள் செயல்படு கின்றன. இனி இவை அனைத் தும் ரிசர்வ் வங்கி கண்காணிப் பின்கீழ் வரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

விளையாட்டு

23 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

49 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

47 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

2 hours ago

மேலும்