திருமலையில் தமிழக பக்தர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்ட கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களில் 50 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அப்படி இருக்கையில், திருமலைக்கு செல்லும் தமிழக பக்தர்கள் தங்கும் வசதிக்காக அல்லல்படுகின்றனர்.

ஏராளமான தமிழக பக்தர்கள் விரதமிருந்து நடைபயணமாக திருமலைக்கு வந்து சுவாமியை தரிசிப்பது வழக்கமாக உள்ளது. அவ்வாறு தாங்கள் நடந்து செல்லும் வழிகளில் சத்திரங்கள் அமைக்க வேண்டும் என்பது தமிழக பக்தர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. தமிழக பக்தர்கள் மூலம் ஆண்டுக்கு பல கோடி வருமானம் பெறும் திருப்பதி தேவஸ்தானம், நடந்து வரும் பக்தர்களுக்கென சென்னை-திருப்பதி இடையே நகரி அருகே ஒரு விடுதி கட்ட திட்டமிட்டிருந்தது. அந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

இந்நிலையில், திருமலையில் கர்நாடக மக்களுக்காக ரூ.200 கோடி செலவில் தங்கும் விடுதிகள் கட்டப்படவுள்ளன. எனவே, தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் தமிழக அரசாவது தங்கும் விடுதியை கட்ட முன் வர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்