பொம்மைகள் தரக்கட்டுப்பாடு ஆணை 2020: நடைமுறைப்படுத்தும் தேதி திடீர் மாற்றம்

By செய்திப்பிரிவு

பொம்மைகள் தரக்கட்டுப்பாடு ஆணை 2020-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான தேதியை, 01.09.2020-க்கு பதிலாக, 01.01.2021-ஆக மாற்றி, மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் இந்திய தர நிர்ணய ஆணையத்தால் பரிசோதித்த பின்னரே அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இது செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள பொம்மைகள் தரக்கட்டுப்பாடு ஆணை 2020-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் சுமார் 268 தர கட்டுப்பாடுகள் உள்ளன. முக்கிய துறைமுகங்களில் பி. ஐ. எஸ். எஸ் ஊழியர்கள் துறைமுகத்திலேயே மாதிரிகளை எடுத்து தயாரிப்புகளை சோதனை செய்ய முடியும்.

இது இரண்டு நிலைகளில் தர பரிசோதனை மேற்கொள்ளப்படும். சீனாவில் இருந்து பெரும்பாலான பொம்மைகள் இறக்குமதி ஆகும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கிய கவனத்தை பெற்றது.

இந்தநிலையில் பொம்மைகள் தரக்கட்டுப்பாடு ஆணை 2020-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான தேதியை, 01.09.2020-க்கு பதிலாக, 01.01.2021-ஆக மாற்றி, மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.


இதனால், கோவிட்-19 பெருந்தொற்று நிலவும் சவாலான காலகட்டத்தில், இந்த ஆணையில் குறிப்பிட்டுள்ள தர நிலைகளைப் பின்பற்றுவதற்கு உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு 4 மாத கால அவகாசம் கிடைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

39 mins ago

வாழ்வியல்

30 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்