இந்தியாவில் ஒரேநாளில் 95 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று: 44 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு: குணமடைந்தோர் 77 சதவீதமாக உயர்வு

By பிடிஐ

இந்தியாவில் இதுவரையில்லாத வகையில், கரோனா வைரஸுக்கு ஒரேநாளில் 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 44 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 95 ஆயிரத்து 735 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 44 லட்சத்து 65 ஆயிரத்து 863 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி 20 லட்சத்தையும், 20-ம் தேதி 30 லட்சத்தையும், கடந்த 5-ம் தேதி 40 லட்சத்தையும் கரோனா தொற்று எட்டியது குறிப்பிடத்தக்கது.

இதில் நம்பிக்கைத் தரும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்து 71 ஆயிரத்து 783 ஆக உயர்ந்து, 77.74 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 19 ஆயிரத்து 18 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20.58 சதவீதமாக இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 1,172 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 75 ஆயிரத்து 62 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்போர் வீதம் 1.68 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று அதிகபட்சமாக 380 பேர் உயிரிழந்தனர். அடுத்தபடியாக கர்நாடகாவில் 128 பேர், , ஆந்திராவில் 74 பேர், பஞ்சாப்பில் 71 பேர் , தமிழகம், உத்தரப் பிரதேசத்தில் தலா 65 பேர், உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்தில் 53 பேர், ஹரியாணாவில் 25 பேர், மத்தியப் பிரதேசத்தில் 31 பேர், டெல்லியில் 19 பேர், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்டில் தலா 14 பேர், குஜராத், ஒடிசா, கேரளா, ராஜஸ்தானில் தலா 13 பேர் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி இதுவரை 5 கோடியே 29லட்சத்து 34 ஆயிரத்து 433மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 11 லட்சத்து 29ஆயிரத்து 756 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்த நிலையில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 27 ஆயிரத்து 787 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 53 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 65 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 90 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 49 ஆயிரத்து 203 ஆக குறைந்துள்ளது.

டெல்லியில் கரோனாவில் நேற்று மட்டும் 20 பேர் உயிரிழந்ததால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,638 ஆக அதிரித்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 773 ஆக அதிகரித்துள்ளது.

குஜராத்தில் நேற்று 16 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு 3,149 ஆக அதிரித்துள்ளது. கரோனாவில் 16,296 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் கரோனாவில் 99 ஆயிரத்து 489 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு நேற்று 128 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த எண்ணிக்கை 6,808 அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 24,616 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கரோனாவில் 97,271 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு நேற்று மட்டும், 74 பேர் உயிரிழந்ததைதயடுத்து, 4,634 ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்