‘‘தேசிய கல்விக் கொள்கை 21-ம் நூற்றாண்டை நோக்கி இளைஞர்களை அழைத்துச் செல்லும்’’ -பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

தேசிய கல்விக் கொள்கை என்பது 21-ம் நூற்றாண்டின் புரட்சிகர சீர்திருத்தம் என்றும் இளைஞர்களை 21-ம் நூற்றாண்டை நோக்கி அழைத்துச் செல்லும் எனவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று கூறினார்.

மும்பையில் உள்ள பார்லே திலக் பள்ளிகள் சங்கத்தின் நூறாவது ஆசிரியர்கள் தினக் கொண்டாட்டங்களில் காணொளி மூலம் பங்கேற்று பேசிய அமைச்சர், ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி, கேள்வி அடிப்படையிலான கல்வி, ஆசிரியர் பயிற்சி அளித்தல் மற்றும் எண் கல்வி அறிவு ஆகிய அனைத்திற்கும் தேசிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

புதிய கல்விக் கொள்கை 2020 நமது இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் என்றும் 21-ம் நூற்றாண்டை நோக்கி அவர்களை அழைத்து செல்லும் என்றும் ஜவடேகர் கூறினார்.

கற்றல், கற்பித்தல் ஆகியவற்றை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் மகிழ்ச்சியான அனுபவமாக தேசிய கல்வி கொள்கை ஆக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்