கர்நாடகாவுக்கே காவிரியில் நீர் இல்லை: முதல்வர் சித்தராமையா தகவல்

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவு வதால் கர்நாடக விவசாயிகளுக்கே போதிய தண்ணீர் இல்லாத நிலை யில், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரி வித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜெய லலிதா, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட க‌ர்நாடக அரசை வலியுறுத்துமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி யிருந்தார். வறட்சி நிலவுவதால் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக தலைமைச் செயலர் கவுஷிக் முகர்ஜி தமிழக அரசுக்கு நேற்று முன் தினம் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா பெங்க ளூருவில் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:

கட‌ந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்தது. அதனால் தமிழகத்துக்கு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அளவைவிட கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் குறைவாக உள்ளது.

பாசனத்துக்காக தண்ணீர் திறக் கப்படாததால் கர்நாடக விவசாயி கள் போராட்டம் நடத்தி வரு கின்றன‌ர். எங்கள் மாநிலத்துக்கே தண்ணீர் இல்லை. இந்த நிலை யில் தமிழகத்துக்கு எப்படி நீர் தர முடியும்? அக்டோப‌ர் மாதத்தில் பருவ‌ மழை பெய்தால் தமிழகத் துக்கு தண்ணீர் திறந்துவிடுவோம். கிருஷ்ணராஜசாகர் அணை நிரம் பினால், தண்ணீர் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உயரும் நீர்மட்டம்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகள் கடந்த ஜூன் மாதத்தில் முழு கொள்ளவை எட்டின. ஆனால் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் அணை, இந்த ஆண்டு முழு கொள்ளவை எட்டவில்லை.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக குடகு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவ தால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது. இதனால் ஆகஸ்ட் மாத இறுதியில் 103 அடியாக இருந்த நீர் மட்டம் இப் போது 109 அடியாக அதிகரித் துள்ளது. 124 அடி கொள்ளளவுள்ள இந்த அணை நிரம்பினால் மட்டுமே, தமிழத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 mins ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்