நவம்பர் 29-க்குள் பிஹார் பேரவைக்கு தேர்தல்: 64 பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த ஆணையம் முடிவு

By செய்திப்பிரிவு

பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலுடன், பல்வேறு மாநிலங்களில் காலியாகவுள்ள 64 பேரவைத் தொகுதிகள், ஒரு மக்களவைத் தொகுதிக்கு வரும் நவ.29-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிஹார் பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பரில் முடிவடை கிறது. இதைத் தொடர்ந்து அங்கு நவம்பருக்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து வந்தது.

இதனிடையே கரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தது.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றுப் பிரச்சினையின்போது தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்கள், தேர்தல்நாளின் கடைசி ஒருமணி நேரத்தில்மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். மற்றவர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்தவர்கள் மட்டுமே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில்வாக்கு அளிக்க அனுமதிக்கப்படுவர் என வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல், பல்வேறு மாநிலங்களில் காலியாகவுள்ள 64 பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து வரும் நவ.29-ம் தேதிக்குள் அனைத்து இடைத்தேர்தல்கள், பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “பிஹார் பேரவைத் தேர்தலுக் காக அங்கு கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் அனுப் பப்படும். கரோனா வைரஸ் தொற்றுப் பிரச்சினையை ஒட்டி அங்கு கூடுதல் இயந்திரங்கள் அனுப்பப்படவுள்ளன.

பிஹாரில் பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சுமூகமான முறையில் நடைபெற்று வருகின்றன. அங்கு பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த ஆணையம் உறுதி பூண்டுள்ளது. அங்கு அனைத்து விதமான பாதுகாப்பு அம்சங்களும் கடைப் பிடிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

வலைஞர் பக்கம்

6 mins ago

சினிமா

11 mins ago

சினிமா

16 mins ago

இந்தியா

24 mins ago

க்ரைம்

21 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்