அரசுத் துறைகளில் மனிதவள மேம்பாடு அதிகரிக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை

By செய்திப்பிரிவு

அரசு ஊழியர்களுக்கான தேசிய திறன் கட்டமைத்தல் திட்டமான கர்மயோகி இயக்கம், அரசுத் துறைகளில் மனிதவள மேம்பாட்டை பெரிய அளவில் மேம்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று கூறினார்.

அரசு ஊழியர்களுக்கான தேசிய திறன் கட்டமைத்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு ஊழியர்கள் சர்வதேச சிறந்த செயல்முறைகளை கற்றுக் கொள்ளும் அதேவேளையில், இந்திய கலாச்சாரத்திலும் அவர்கள் வேரூன்றி இருப்பதற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக, அரசு ஊழியர்களுக்கான தேசிய திறன் கட்டமைத்தல் திட்டமான கர்மயோகி இயக்கம் அமையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் மோடி கூறுகையில் ‘‘அரசு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த நவீன உள்கட்டமைப்பு பயன்படுத்தப்படும். வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் அரசு ஊழியர்களை இன்னும் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், ஆக்கப்பூர்வமானவர்களாகவும் & புதுமைகளை புகுத்துபவர்களாகவும் ஆக்குவதே கர்மயோகி இயக்கத்தின் நோக்கமாகும்," என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

விளையாட்டு

23 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

49 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

47 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

2 hours ago

மேலும்