மெட்ரோ ரயில் எப்படி இயக்கப்பட வேண்டும்?- வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

By செய்திப்பிரிவு

மெட்ரோ ரயில் இயக்கத்தை செப்டம்பர் 7-ம் தேதியில் இருந்து படிப்படியாக தொடங்குவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்டுள்ளார்.

செப். 30-ம் தேதி வரை கரோனா ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. ஊரடங்கில் 4-ம் கட்டத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ம் தேதியில் இருந்து படிப்படியாக அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

சென்னையிலும் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் மெட்ரோ ரயில் இயக்கத்தை செப்டம்பர் 7-ஆம் தேதியில் இருந்து படிப்படியாக தொடங்குவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று வெளியிட்டார்

இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டு, உள்துறை அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டன.

சில விரிவான வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:

அ. மெட்ரோ ரயில் இயக்கம் செப்டம்பர் 7-ம் தேதியில் இருந்து படிப்படியாகத் தொடங்கி, செப்டம்பர் 12-ஆம் தேதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும். பயணிகள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ரயில்களின் எண்ணிக்கை முறைப்படுத்தப்படும்.

ஆ. கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள நிலையங்களின் உள்ளே வரும்/வெளியே செல்லும் வழிகள் மூடப்பட்டிருக்கும்.

இ. சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக, நிலையங்களுக்குள்ளும், ரயில்களுக்கு உள்ளும் தேவையான குறியீடுகள் வரையப்பட்டிருக்கும்.

ஈ. அனைத்து பயணிகளும், பணியாளர்களும் முகக் கவசங்களைக் கட்டாயமாக அணிய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

24 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

மேலும்