29 லட்சம் பேர் குணமடைந்தனர்;கரோனா தொற்று 37 லட்சத்தைக் கடந்தது: உயிரிழப்பு 66 ஆயிரத்துக்கும் மேல் அதிகரிப்பு

By பிடிஐ

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து 29 லட்சம் பேர் குணமடைந்தனர். அதேசமயம், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்தைக் கடந்துள்ளது, உயிரிழப்பு 66 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என மத்திய சுகாதரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 78 ஆயிரத்து 357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த பாதிப்பு 37 லட்சத்து 69 ஆயிரத்து 523 ஆக அதிரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி 20 லட்சத்தை எட்டிய கரோனா எண்ணிக்கை 23-ம் தேதி 30 லட்சத்தையும், இன்று 37 லட்சத்தையும் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆறுதல் அளிக்கும்விதமாக கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29 லட்சத்தைக் கடந்து, 29 லட்சத்து ஆயிரத்து 908 ஆக உயர்ந்துள்ளது, குணமடைந்தவர்கள் விகிதமும் 76.98 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்து 8 லட்சத்து ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 1,045 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 66 ஆயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் உயிரிழப்பு 1.76 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 4 கோடியே 43 லட்சத்து 37 ஆயிரத்து 201 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 12 ஆயிரத்து 367 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 320 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 24 ஆயிரத்து 903ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 98ஆயிரத்து 866 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 96 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7,418 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 52 ஆயிரத்து 379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் 14 ஆயிரத்து 626 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,462ஆக அதிகரித்துள்ளது.

குஜராத்தில் 15 ஆயிரத்து 708 பேர் சிகிச்சையில் உள்ளனர். 14 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 3,034 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 91,018 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 135 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 5,837ஆக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் 22,578 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 298 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் ஒரு லட்சத்து 1,210 பேர் சிகிச்சையில் உள்ளனர். 84 பேர் நேற்று பலியானதையடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,053 ஆக அதிரித்துள்ளது.

தெலங்கானாவில் 32 ஆயிரத்து 341 பேர் சிகிச்சையில் உள்ளனர். அங்கு நேற்று மட்டும் 10 பேர் பலியானதையடுத்து, உயிரிழப்பு 846 ஆக அதிகரித்துள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்