இந்தியாவில் புதிதாக 67,751 பேருக்கு கரோனா தொற்று; பலி எண்ணிக்கை 59,449 ஆக அதிகரிப்பு

By பிடிஐ

இந்தியாவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 67,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் 1059- ஆக அதிகரிக்க மொத்தமாக இதுவரை 59,449 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

இது தொடர்பாக இன்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32.34 லட்சமாக அதிகரித்துள்ளது. ஆறுதல் தரும் விதமாகக் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24 லட்சத்து 67 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 66,550 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

நாட்டில் மொத்தம் தற்போது 7 லட்சத்து 7 ஆயிரத்து 267 பேர் கரோனா சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இது மொத்த பாதிப்பான 32,34,474-ல் 21.86% ஆகும். மரண விகிதம் 1.83% ஆகக் குறைந்துள்ளது.

ஐசிஎம்ஆர் தகவல்கைன் படி இதுவரை 3 கோடியே 76 லட்சத்து 51 ஆயிரத்து 512 டெஸ்ட்கள் நடத்தப்பட்டுள்ளன. செவ்வாய் கிழமை மட்டும் 8 லட்சத்து 23 ஆயிரத்து 992 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்ட்ராவில் 1,66,239 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் நாட்டில் கரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது, அடுத்த இடத்தில் ஆந்திரத்தில் 89,932 பேர் இன்னும் சிகிச்சையில் இருக்கின்றனர்.

தமிழகத்தில் 52,128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலங்கானாவில் 25,685 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1059 பேர் மரணிக்க, மகாராஷ்ட்ராவில் அதிகபட்சமாக 329 பேரும், ஆந்திராவில் 92 பேரும், கர்நாடகாவில் 148 பேரும் டெல்லியில் 17 பேரும், தமிழ்நாட்டில் 107 பேரும் மேற்கு வங்கத்தில் 58 பேரும் கரோனாவுக்கு மரணமடைந்துள்ளனர்.

பஞ்சாபில் 49 பேரும், ராஜஸ்தானில் 13 பேரும் தெலங்கானாவில் 10 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 72 பேரும் குஜராத்தில் 20 பேரும், ஹரியாணாவில் 10 பேரும் ஜம்மு காஷ்மீரில் 14 பேரும், ஜார்கண்டில் 17 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 19 பேரும். கோவாவில் 9 பேரும், அசாமில் 8 பேரும் சத்திஸ்கரில் 15 பேரும் கோவிட்டுக்குப் பலியாகியுள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கையில் மகாராஷ்ட்ரா 22, 794 பலிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 6,721 ஆகவும் உ.பி.யில் 3059 ஆகவும் மேற்கு வங்கத்தில் 2,909 ஆகவும் கர்நாடகாவில் பலி எண்ணிக்கை 4,958 ஆகவும் டெல்லியில் பலி எண்ணிக்கை 4330 ஆகவும் குஜராத்தில் 2,928 ஆகவும் ஆந்திராவில் 3,460 ஆகவும் ம.பி.யில் 1265 ஆகவும், பஞ்சாபில் 1178 ஆகவும் ராஜஸ்தாஇல் 980 ஆகவும் தெலங்கானாவில் 780 ஆகவும் ஜம்மு காஷ்மீரில் 638 ஆகவும் ஹரியாணாவில் 623 ஆகவும் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

இந்தியா

12 mins ago

க்ரைம்

9 mins ago

இந்தியா

15 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்