போலீஸாரின் விழிப்புணர்வு பிரச்சாரத்தால் சத்தீஸ்கரில் 70 மாவோயிஸ்ட்கள் சரண்

By செய்திப்பிரிவு

சத்தீஸ்கரில் போலீஸார் நடத்தி வரும் விழிப்புணர்வு பிரச்சாரம் காரணமாக கடந்த 2 மாதங்களில் 70 மாவோயிஸ்ட்கள் சரணடைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. மாவோயிஸ்ட்களை ஜனநாயகப் பாதைக்கு திருப்ப ‘வீடு திரும்புவோம்’ என்ற பெயரில் போலீஸார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் உள்ள சுமார் 50 கிராமங்களில் போலீஸார் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். மாவோயிஸ்ட்கள் சரணடைய வேண்டும் என்றும் அதற்கு அவர்களது குடும்பத்தார் கோரிக்கை வைக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்தனர். துண்டுபிரசுரங்களும் வழங்கினர்.

இந்த பிரச்சாரம் காரணமாக கடந்த 2 மாதங்களில் 70 மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்பி சரணடைந்துள்ளனர். இவர்களில் 15 பேர் தலைக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

தண்டேவாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லாவா கூறும்போது, ‘‘மாவோயிஸ்ட்கள் சரணடைந்து ஜனநாயகப் பாதைக்கு திரும்ப வாய்ப்பளித்துள்ளோம். விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் மாவோயிஸ்ட்கள் அதிக அளவில் சரணடைந்து வருகின்றனர். மாவோயிஸ்ட்கள் சரணடைவது வெளிப்படைத்தன்மையுடன் நடக்கிறது. போலி என்கவுன்ட்டர்கள், கைதுகள் பற்றி புகார் இல்லை’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

12 mins ago

தமிழகம்

5 mins ago

இந்தியா

23 mins ago

க்ரைம்

40 mins ago

இந்தியா

50 mins ago

விளையாட்டு

39 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

மேலும்