புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மலிவு விலை வாடகை வீடு: மத்திய அரசு நடவடிக்கை

By செய்திப்பிரிவு

புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், நகர்ப்புற ஏழை மக்களுக்கும் சிரமமின்றி வாழ்வதற்கு தனியார் கூட்டு திட்டம் மூலமாக மலிவு விலை வாடகை வீடு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மலிவான வாடகை வீடு கட்டுகள வளாகங்கள் திட்டம் குறித்த தகவல்களை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைகளுக்கான மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் பூரி, இன்று காணொலி மூலமாக வெளியிட்டார். இந்நிகழ்ச்சிக்கு மத்திய வீட்டுவசதி நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் செயலர் துர்கா சங்கர் மிஸ்ரா தலைமை வகித்தார்.

மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் மூத்த அதிகாரிகளும், என்ஏஆர் இடிசி, ஓசிஆர், இடிஏஐ, எஃப்ஐசிசிஐ, ஏஎஸ்எஸ்ஓ, சிஹெச்ஏஎம் (NAREDCO, CREDAI, FICCI, CII and ASSOCHAM) ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தின் போது புலம்பெயர் தொழிலாளர்களும், நகர்ப்புற ஏழை மக்களும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பினார்கள்.

சுயசார்பு இந்தியா உருவாக்கப்பட வேண்டுமென்று பிரதமர் விடுத்த வேண்டுகோளையடுத்து, கொடுக்கக்கூடிய அளவிற்கான வாடகை வீடு வளாகங்கள் குறித்த துணைத்திட்டத்திற்கு, பிரதமர் ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தின் துணைத் திட்டமாக 8 ஜூலை 2020 அன்று மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புறப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், நகர்ப்புற ஏழை மக்களுக்கும் சிரமமின்றி வாழ்வதற்கு வகை செய்யப்படும்.

மலிவான வாடகை வீட்டு வளாகங்கள் இரண்டு மாதிரிகள் மூலமாக செயல்படுத்தப்படும்

மாதிரி 1: தற்போது அரசு நிதி உதவியுடன் கூடிய காலி இல்லங்கள் மலிவான வாடகை வீட்டு வளாகங்கள் இல்லங்களாக மாற்றப்பட்டு பொதுமக்கள் தனியார் கூட்டு திட்டம் மூலமாக அல்லது பொது முகமைகள் மூலமாக இருபத்தைந்து ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும்

1. பல்வேறு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு மத்திய மாநில அரசுத் திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு, தற்போது காலியாக உள்ள இல்லங்களை மலிவான வாடகை வீட்டு வளாகங்கள் திட்ட வீடுகளாக மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பு இந்தத் திட்டத்தின் மூலம் அளிக்கப்படுகிறது.

2. இதுதொடர்பான ஆர் எஃப் பி (RFP) மாதிரி, அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. தங்கள் மாநிலத்துக்கு ஏற்ப அவை, அதை வடிவமைத்துக் கொள்ளலாம்.

மாதிரி 2 : பொதுத்துறை/ தனியார் நிறுவனங்கள் தங்களிடமுள்ள காலி இடங்களை ஏ ஆர் எச் சி களாக கட்டுவது, செயல்படுத்துவது, பராமரிப்பது -- காலம் 25 ஆண்டுகள்

1. பல்வேறு தொழில் துறைகள், வர்த்தக அமைப்புகள், உற்பத்தி நிறுவனங்கள், கல்வி சுகாதார அமைப்புகள், வளர்ச்சி அமைப்புகள், வீட்டுவசதி வாரியங்கள், மத்திய -மாநில பொதுத்துறை நிறுவனங்கள், இதர பிற அமைப்புகளிடம் பெருமளவிலான காலி மனைகள் உள்ளன. இவ்வாறு உள்ள காலி நிலங்களை புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கான எளிமையான வீட்டு வளாகங்களாகத் திறம்படப் பயன்படுத்துவதற்கு ஏற்றவகையில், தகுந்த விதிமுறைகளும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு கொள்கை ஆதரவும் அளிக்கப்படும்.

2. மேலும் தங்களது சொந்த காலி இடங்களில் ஏ ஆர் எச் சி இல்லங்களைக் கட்டுவது, பராமரிப்பது ஆகியவற்றுக்காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தகுந்த நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்காக வீட்டு வசதி நகர்ப்புற விவகார அமைச்சகம் இ ஓ ஐ வெளியிட உள்ளது.

சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள், துறைகள், மாநில, யூனியன் பிரதேச அரசுகள், தனியார், பொது பங்குதாரர்கள் ஆகிய பல தரப்பினருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்திய பிறகு ஏ ஆர் எச் சி திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. ஏ ஆர் எச் சி திட்டத்தை செயல்படுத்துவதற்கு, அனைத்து பங்குதாரர்களுக்கும் உதவியளிக்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவுப் பெட்டகம் வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

52 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்