ராமர் கோயில் பூமி பூஜைக்குப் பிரதமர் மோடி வருகை: அனுமதியில்லாதவர் நுழையாதபடி அயோத்யா எல்லைகளுக்கு சீல்

By ஆர்.ஷபிமுன்னா

அயோத்யாவில் ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விழாவிற்கு அனுமதி இல்லாதவர்கள் எவரும் நுழையாதபடி அதன் எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 5 இல் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்த்து சுமார் 200 முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்படுகின்றனர்.

எனினும், நாடு முழுவதிலும் உள்ள ராமபக்தர்களும் ஆகஸ்ட் 5 இல் அயோத்தி வர விரும்புகின்றனர். இவ்விழாவை நடத்தும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினர், கரோனா பரவல் காரணமாக அனுமதியில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இதற்கு முன் அயோத்தியில் இதுபோல் கரசேவகர்களுக்கு பலமுறை நுழையாதபடி சீல் வைக்கப்பட்டிருந்தது. அப்போதும் அவர்கள் ரயில் பாதைகள் உள்ளிட்ட பல வழிகள் மூலமாக அயோத்தியில் நுழைந்திருந்தனர்.

இதுபோல், இந்தமுறை அனுமதிக்கப்படாத ராமபக்தர்கள் அயோத்தியில் நுழைந்து விடாதபடி அம்மாவட்டம் முழுவதிலும் உள்ள எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. இதில், உபி காவல்துறையினருடன், மத்திய பாதுகாப்பு படைகளும் இப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அயோத்யாவின் அண்டை மாவட்டங்களான அம்பேத்கர் நகர், பஸ்தி, கோண்டா, பாரபங்கி, சுல்தான்பூர் மற்றும் அமேதி ஆகியற்றின் மூலம் உள்ளே நுழையாதபடி சீல் வைக்கப்பட்டுள்ளன. இதன் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பிற்காக உபி காவல்துறையின் உயர் அதிகாரிகள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேபோல், அயோத்தியின் சரயூ நதி வழியாகவும் எவரும் நுழைந்து விடாதபடி உபி சிறப்பு படையின் நீர்பாதுகாப்பு பிரிவு பணி அமர்த்தப்பட்டுள்ளது. விழாவிற்கு ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 3 இரவு முதல் துவங்கும் இப்பாதுகாப்பு ஆகஸ்ட் 6 வரை நீட்டிக்கும்.

விழா நடைபெறும் அயோத்தி நகர் முழுவதிலும் ’அதிதீவிரப் பாதுகாப்பு பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விழாவிற்கு பிரதமர் மோடி வந்து செல்வது வரை நீட்டிக்கும்.

இதனிடையே, ராமர் கோயில் விழாவை நேரடியாக உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டு வருகிறார். இதற்காக அவர் மீண்டும் ஆகஸ்ட் 2 இல் அயோத்திக்கு வருகை புரிய உள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

55 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்