தெலங்கானா அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம்: காற்றில் பறந்த சமூக இடைவெளி

By ஏஎன்ஐ

தெலங்கானாவில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,259 ஆக உள்ளது. இதில் 11,155 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா மாநில அமைச்சர் ஒருவரே சமூக இடைவெளியைக் காற்றில் பறக்க விட்டிருப்பதாக அங்கு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

தெலங்கானா மாநில தொழிற்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி.ராமாராவ் மற்றும் சில டி.ஆர்.எஸ். கட்சித் தலைவர்கள் ஹைதராபாத்தில் அடிக்கல் நாட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டனர், ஆனால் அனைத்து கரோனா விதிமுறைகளும் இதில் மீறப்பட்டுள்ளது.

கே.டி.ராமாராவ், அமைச்சர் ஸ்ரீநிவாஸ் கவுட், முதன்மைச் செயலர் சோமேஷ் குமார், ஹைதராபாத் நகர மேயர் போந்த்து ராம் மோகன், மற்றும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதியின் தலைவர்கள் பலர் ஆகியோர் நீரா கேஃப் அடிக்கல்நாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் சமூக இடைவெளி காற்றில் பறந்தது. சுமார் 200 பேர் இந்தக் கூட்டத்தில் நெருக்கமாக அமர்ந்து அளவளாவியபடி இருந்தது சர்ச்சையையும் கரோனா அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்