அயோத்தி ராமர் கோயில் 161 அடி உயரம்; 5 குவிமாடங்கள் கொண்டதாக இருக்கும்: அறக்கட்டளை தகவல்

By செய்திப்பிரிவு

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் உயரன் 161 அடியாக இருக்கும், 5 குவிமாடங்களுடன் கூடியதாகக் கட்டப்படும் என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

பிரபல கட்டிட வடிவமைப்பாளர் சந்திரகாந்த் சோம்புராவினால் இந்தக் கோயில் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று அறக்கட்டளைத் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் நேற்று 2 மணி நேரக் கூட்டத்தைக் கூட்டினார்.

இது தொடர்பாக அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சவ்பால் கூறும்போது, “ராமர் கோயில் 161 அடி உயரம் கொண்டதாக இருக்கும், முன்பு 3 குவிமாடங்கள் என்று தீர்மானிக்கப்பட்டது, தற்போது இது 5 என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் பூமி பூஜைக்காக பிரதமர் மோடியிடம் முன்மொழிவுகளை அனுப்பியுள்ளோம். ஆகஸ்ட் 3 அல்லது 5ம் தேதி நடக்கும் பூமி புஜைக்கு பிரதமர் மோடி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய கூட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் பரிந்துரைத்த வடிவமைப்பில் கோயில் இருக்கும் என்ற முடிவு எட்டப்பட்டது. அதன் நீளம், அகலம், உயரம் அதிகரிக்கப்படும்.

ராமர் கோயிலைக் கட்டி முடிக்க மூன்றரை ஆண்டுகள் ஆகும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

இந்தியா

3 mins ago

இந்தியா

46 mins ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்