கரோனாவைச் சிறப்பாகக் கையாள்வதாக பேச்சு மட்டுமே உள்ளது: பரிசோதனை இல்லாததால் கரோனா தொற்று 200% அதிகரிப்பு: பிரியங்கா சாடல்

By ஏஎன்ஐ

பாஜக அரசு கரோனா நடவடிக்கை குறித்து பேசித்தான் வருகிறதே தவிர செயலில் ஒன்றுமில்லை என்றும் கரோனா மருத்துவப் பரிசோதனைகள் செய்யாததால் 25 மாவட்டங்களில் நோய்த்தொற்றும் பரவலும் அதிகரித்துள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா உ.பி. அரசைச் சாடியுள்ளார்.

உ.பி. அரசு இதுவரை 45,163 கரோனா பாசிட்டிவ் நோய் தொற்றை ரிப்போர்ட் செய்துள்ளது, ஆனால் இன்னமும் அதிகமாகவே இருக்கும் ஏனெனில் கரோனா டெஸ்ட்டிங் செய்வது மிகக்குறைவு என்று உ.பி.யில் சமூக ஆர்வலர்களும் உணர்கின்றனர்.

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி கூறியதாவது:

3 மாதகால லாக்டவுன், ஊரடங்கு உத்தரவுக் காலக்கட்டம் கிடைத்தும், உ.பி. அரசு கரோனாவை சிறப்பாகத் தாங்கள் கையாள்வதாக கோரினாலும், பேசி வந்தாலும் ஜூலை மாதத்தில் மட்டும் கரோனா பரவல் 25 மாவட்டங்களில் கடுமையாக அதிகரித்துள்ளது.

3 மாவட்டங்களில் மட்டும் 200 சதவீதம் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. மூன்றுக்கும் அதிகமான மாவட்டங்களில் 400 சதவீதமும் ஒரு மாவட்டத்தில் 1000 சதவீதமும் தொற்று அதிகரித்துள்ளது. காரணம் கரோனா மருத்துவப் பரிசோதனைகள் குறைபாடுகளே.

பிரயாக்ராஜில் கரோனா பாசிட்டிவ் என்று அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 70 சதவீதத்தினர் 48 மணி நேரத்தில் இறந்து விடுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

இப்படிப் பரவும் என்று முதலிலேயே நாங்கள் பயந்தோம், டெஸ்ட்டிங்குகளை அதிகரியுங்கள் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் எழுதினோம்.

இன்று இந்த நிலைக்குக் காரணம் மருத்துவப் பரிசோதனைகள் இல்லை. நோய்த்தொற்றை அறிவிப்பதில் தாமதம், தரவுகளை திரிப்பது, நோய்த்தடம் காணுதல் இன்மை. இவற்றுக்கெல்லாம் உ.பி.அரசிடம் பதில் இல்லை.

இவ்வாறு கூறியுள்ளார் பிரியங்கா காந்தி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

41 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

51 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

மேலும்