எம்எல்ஏ மரணத்தை அரசியலாக்கும் பாஜக- குடியரசுத் தலைவருக்கு மம்தா கடிதம்

By செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டம், ஹெம்தாபாத் தொகுதியில் கடந்த 2016-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டு வென்றவர் தேவேந்திர நாத் ராய். கடந்த ஆண்டு இவர் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் ஹெம்தாபாத் தொகுதியில் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு வெளியே கடந்த திங்கள்கிழமை அவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் அவர் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது. மேலும் பாஜக பிரதிநிதிகள் நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, மம்தா அரசை கலைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது மம்தா எழுதிய கடிதத்தை அவரிடம் ஒப்படைத்தார். எம்எல்ஏ தேவேந்திர நாத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவரது மரணத்தை பாஜக அரசியலாக்குவதாகவும் அக்கடிதத்தில் மம்தா குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

12 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்