ஜம்முவில் எல்லை பகுதியில் ராணுவ தளபதி ஆய்வு

By செய்திப்பிரிவு

ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே ஜம்மு பகுதியில் அமைந்துள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியை நேற்று நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு நிலவரம் பற்றி ஆய்வு செய்தார்.

ஜம்முவில் இந்தியா - பாகிஸ்தான் இடையே சுமார் 198 கிமீதொலைவுக்கு சர்வதேச எல்லைப் பகுதி பரந்துள்ளது. இந்தப் பகுதியில் பதற்றப்படும் அளவுக்கு கொந்தளிப்பான நிலவரம் இல்லை. எல்லைப் பிரச்சினையால் சீனா- இந்தியா இடையே நிலவி வந்தபதற்றம் தணிந்து வரும் நிலையில்,ராணுவ தளபதியின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

ஜம்முவில் உள்ள விமான நிலையத்துக்கு விமானம் மூலம்வந்த நரவானே, டைகர் படை பிரிவுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் எல்லையையொட்டி உள்ள போர்முனைப் பகுதிகளுக்குச் சென்று பாதுகாப்பு நிலவரம் குறித்தும் படைவீரர்களின் ஆயத்த நிலை பற்றியும் ஆய்வு செய்தார். பின்னர் அவர் பதான் கோட் பகுதியிலும் ஆய்வு செய்தார்.

ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் தமது பரப்புக்குள் இந்தியா தரப்பில் எல்லை பாதுகாப்புப்படை காவல் பணி மேற்கொள்கிறது. அவசர காலத்தில் படைவீரர்கள் விரைவாக சென்றுசேர வசதியாக கதுவா மாவட்டம் ஹிராநகரின் தார்னா பகுதியில் இரண்டு, அக்னூர்-பலன்வாலா பிரிவில் நான்கு என ராணுவ ரீதியில் முக்கியத்துவம் மிக்க பாலங்களை அண்மையில் எல்லை சாலைகள் நிறுவனம் கட்டி முடித்தது. இவற்றை அண்மையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

45 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்