டெல்லியில் கரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படும் மத்திய, மாநில அரசுகள்: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

By செய்திப்பிரிவு

தலைநகர் டெல்லியில் கரோனா வைரஸ் பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்காக மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ்பாதிப்பு நிலவரம், சிகிச்சை முறைகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி பரிசோதனையின் நிலை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் உயரதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடி கூறும்போது, ‘‘டெல்லியில் கரோனா வைரஸ் பரவலை கணிசமாக கட்டுப்படுத்துவதில் மத்திய மற்றும் டெல்லி அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இங்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை மற்ற மாநிலங்களும் பின்பற்றி, கரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டும்’’ என்று பாராட்டினார்.

உலக நாடுகளில் கரோனா வைரஸ் அதிகம் பாதித்த 3-வதுநாடாக இந்தியா இருக்கிறது. எனினும், இந்திய மக்கள்தொகை, வாழ்க்கை முறை போன்றவற்றை கருத்தில் கொள்ளும்போது, இந்தியாவில் கரோனா பாதிப்பு மிகக் குறைவுஎன்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் நேற்று மாலை நிலவரப்படி மொத்தம் 8,20,916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5,15,386 பேர் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்