கல்வியை அரசியலாக்க வேண்டாம்: மத்திய அமைச்சர் போக்ரியால் கருத்து

By செய்திப்பிரிவு

நடப்பு கல்வியாண்டுக்கான (2020-21) பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அதன்படி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 190 பாடத்திட்டங்களில் அரசியல் அறிவியல் பிரிவில் ஜனநாயக உரிமைகள், இந்தியாவில் உணவு பாதுகாப்பு, கூட்டாட்சி, குடியுரிமை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய அத்தியாயங்களை சிபிஎஸ்இ நீக்கியிருந்தது. இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து சில பாடங்களை நீக்கியது தொடர்பாக பல விமர்சனங்கள் வந்துள்ளன. தவறான கதைகளை சித்தரிக்க தலைப்புகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் அவர்கள் (அரசியல்வாதிகள்) பரபரப்பை நாடுகின்றனர். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. நிபுணர்களின் ஆலோசனை, பரிந்துரைகளை பின்பற்றியே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. கல்வியில் அரசியலை புகுத்துவதை விட்டுவிட்டு, நமது அரசியலில் அதிக கல்வியை புகுத்துவோம். குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவது புனிதமான பணியாகும். அதை அரசியல் ஆக்க வேண்டாம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்