ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் எம்எல்ஏ.வுக்கு கரோனா பாதிப்பு: தனிமைப்படுத்திக் கொண்ட முதல்வர்

By செய்திப்பிரிவு

ஜார்க்கண்டில் அமைச்சர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன்தனிமைப்படுத்திக் கொண்டார்.

ஜார்க்கண்ட் மாநில குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சர் மிதிலேஷ் தாக்குருக்கும், ஆளும்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் மதுரா மஹாட்டோ என்பவருக்கும் கரோனா தொற்று இருப்பதுநேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் தலைநகர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சட்டப்பேரவை உறுப்பினர் தனாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இருவருடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விசாரணை நடைபெற்றது. அதில் முதல்வர் ஹேமந்த் சோரனும் அவர்களுடன்தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முதல்வர் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கும் கரோனா பரிசோதனை நடைபெற உள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் ஹேமந்த் சோரன், தனது அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்களும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் அமைச்சரும் எம்எல்ஏவும் விரைவில் குணமடைய வேண்டும் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

37 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்