2.8 லட்சம் வேலைவாய்ப்பு; ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு பெறுவதே மத்திய அரசின் இலக்கு: அமித் ஷா உறுதி

By செய்திப்பிரிவு

2.8 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், 33 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுளை ஈர்த்தல், மாநில அரசுகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ஏற்படுத்துதல் ஆகிய திட்டத்துடனேயே பிரதமர் மோடி தற்சார்பு பொருளாதார நடவடிக்கைகளை அறிவித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் கடந்த 6 நாட்களில் மிகவும் தீவிரமடைந்துளளது. கடந்த 2-ம் தேதியிலிருந்து நாள்தோறும் ஆயிரத்துக்குக் குறைவில்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், டெல்லி அரசு அமைத்திருந்த மருத்துவக் குழு அளித்த அறிக்கையில் ஜூலை மாத இறுதிக்குள் டெல்லியில் 5.50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்திருந்தது.

இந்த சூழலில் டெல்லியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்வது தொடர்பாக கூட்டம் நேற்று நடந்தது. டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:

வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. நிலக்கரி துறை வளர்ச்சிக்கு போடப்பட்ட பூட்டு இன்று உடைக்கப்பட்டுள்ளது. எரிசக்தியில் தன்னம்பிக்கை அடைய இந்தியா இன்று பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது. 41 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தால் 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.33 ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் என எதிர்பார்ப்பு உள்ளது.

2.8 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், 33 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுளை ஈர்த்தல், மாநில அரசுகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ஏற்படுத்துதல் ஆகிய திட்டத்துடனேயே பிரதமர் மோடி தற்சார்பு பொருளாதார நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

9 mins ago

ஜோதிடம்

51 mins ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்