அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு இன்று முடிவு?

By பிடிஐ

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அமைச்சரவை இன்று முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

கடந்த ஏப்ரலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப் பட்டது. அதன்படி கடந்த ஜனவரி முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை தற்போதுள்ள 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அதாவது 6 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மத்திய அமைச்சரவை இன்று முடிவெடுக் கும் என்று தெரிகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். இதன்மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 55 லட்சம் ஓய்வூதியர்களும் பலன் அடைவார்கள்.

இதுகுறித்து மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்களின் தலைவர் குட்டி கூறியபோது, 7-வது ஊதிய கமிஷன் 18 மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்யும் என்று அரசு உறுதி அளித்தது, இதன்மூலம் ஊதிய உயர்வை தள்ளிவைக்க முடிவு செய்திருப்பது தெரிகிறது. தற்போதைய அகவிலைப்படியுடன் இடைக்கால நிவாரணத்தையும் அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

16 mins ago

ஜோதிடம்

58 mins ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்