வெளி மாநிலங்களில் இருந்து உ.பி. திரும்பிய 10 லட்சம் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 நிதியுதவி- முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு திரும் பிய புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் 10 லட்சம் பேருக்கு தலா ரூ.1000 நிதியுதவி, அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக லக்னோ வில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் காரண மாக வெளி மாநிலங்களில் இருந்து உத்தர பிரதேசத் துக்கு இதுவரை 35 லட்சம் தொழிலாளர்கள் திரும்பி யுள்ளனர். இதில் 10. 4 லட்சம் பேருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் தலா ரூ.1,000 நிதியுதவியாக செலுத்தப்பட்டுள்ளது. மற்ற தொழிலாளர்களுக்கும் படிப் படியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

உ.பி.க்கு திரும்பும் தொழி லாளர்கள் தனிமை முகாம் களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான பரிசோதனைகள் செய்யப் பட்டு உணவும் அளிக்கப் படுகிறது. இவர்கள் அனை வரும் நமது நாட்டின் வளர்ச்சியில் மிகப் பெரிய பங்காற்றி வருகின்றனர். தனது தொழில் திறமையின் மூலம் அவர்கள் சமூகத்துக்கு முன் மாதிரியாக திகழ்கின்றனர். அவர்களின் நலனுக்கான திட்டங்களில் உ.பி. அரசு சிறப்பாகச் செயல்படுகிறது.

வெளி மாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் உ.பி. திரும்பு வதற்கு 12,000-க்கும் அதிக மான பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. உ.பி. திரும் பிய தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்கான ரேஷன் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது. தொழிலாளர் விஷயத்தில் உ.பி. அரசு சிறப்பாக செயல் படுவதால்தான் கரோனா வைரஸ் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்த போது உ.பி. அரசுக்கு எதிராக எதையும் கூறவில்லை.

சொந்த ஊர்களுக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டிய பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சமூக, பொருளாதார பாதுகாப்புக்கு தேவையான எல்லாவற்றையும் உ.பி. அரசு செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக கோரப்பூர், வாரணாசி, ஜான்சி, சித்தார்த் நகர், மற்றும் கோண்டா பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளிடம் காணொ லிக் காட்சி மூலம் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துரை யாடினார். அப்போது அவர் களின் குறைகளையும் கேட் டறிந்தார். மீதமுள்ள 25 லட் சம் புலம்பெயர் தொழிலாளர் களுக்கும் விரைவில் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் அப் போது அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

49 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்