வந்தே பாரத் திட்டம்; கூடுதலாக 58  விமானங்கள் இயக்க மத்திய அரசு முடிவு

By செய்திப்பிரிவு

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 58 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

கரோனா லாக்டவுன் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை அழைத்துவரும் மத்திய அரசின் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் கடந்த மே 7-ம் தேதி முதல் இதுவரை 1.07 லட்சம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதுவரை முதல்கட்ட வந்தே பாரத் திட்டம் முடிந்து 2-வது கட்டம் நடந்து வருகிறது. இந்த 2-வது கட்டம் வரும் 13-ம் தேதி வரை இருக்கும்.
முதல்கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டம் மே 7-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 12 நாடுகளில் இருந்து 15 ஆயிரம் இந்தியர்கள் கப்பல், விமானம் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டார்கள். 2-வது கட்ட வந்தே பாரத் திட்டம் மே 17-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை சொல்லப்பட்டு பின்னர் ஜூன் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்தநிலையில் மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவாது:

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 58 விமானங்கள் இயக்கப்படும். தற்போது 107 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இனிமேல் 165 விமானங்கள் இயக்கப்படும். ஜூன் 30-ம் தேதி வரை இந்த விமானங்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே 3-வது கட்ட வந்தே பாரத் திட்டத்துக்காக மத்திய அரசு தீவிரமாகத் தயாராகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

41 mins ago

ஜோதிடம்

51 mins ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்