வந்தே பாரத் மிஷன் 2-ம் கட்டம்; 1 லட்சம் பேரை அழைத்து வர இலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் 2-ம் கட்டத்தில் ஒரு லட்சம் பேரை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் பல்வேறு நாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர வந்தேபாரத் மிஷன் தி்ட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கடல் மார்க்கமாக கப்பற்படைக் கப்பல்கள் சமுத்திர சேது திட்டத்தை செயல்படுத்தி வெளிநாடுகளில் சி்க்கியவர்கள் மீட்டு வரப்படுகின்றனர்.

கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் ேததிவரை முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்ட வந்தே பாரத் மிஷன் தி்ட்டம் மூலம் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா, பிலி்ப்பைன்ஸ், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 15 ஆயிரம் இந்தியர்கள் 64 விமானங்கள் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டனர்.

2-வது கட்ட வந்தேபாரத் மிஷன் திட்டம் மே 16-ம்தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் 18 நாடுகளில் இருந்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்த 2-ம் கட்ட மீட்புப்பணியில் இந்தோனேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, கனடா, ஜப்பான், நைஜிரியா, கஜகஸ்தான், உக்ரைன், கிர்கிஸ்தான், பெலாரஸ், ஜார்ஜியா, தஜிகிஸ்தான், ஆர்மீனியா உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து 32ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

மேலும் 2-வது கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டம் வரும் ஜூன் 13-ம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்தநிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில் ‘‘வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் 2-ம் கட்டத்தில் ஒரு லட்சம் பேரை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60 நாடுகளில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள். இந்தியா திரும்புவதற்காக 3,08,200 பேர் பதிவு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி வந்தே பாரத் திட்டத்தின் 3-ம் கட்டம் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

10 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்