டெல்லியில் கொளுத்தும் வெயில்: 47.6  டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு; அனல் காற்றால் மக்கள் கடும் அவதி

By செய்திப்பிரிவு

டெல்லி பாலம் விமான நிலையத்தில் 47.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உம்பன் புயலுக்கு பிறகு நாடுமுழுவதும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்ப நிலை மிகவும் வாட்டி வதைக்கும் நிலையில் மேலும் ஒருவாரத்திற்கு அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

தலைநகரான டெல்லியில் தொடர்ந்து வெப்பம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. அதிகபட்சமாக டெல்லி பாலம் விமான நிலையத்தில் 47.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போன்ற கொடும் வெயில், வெப்பம் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் உணரப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் சாருவில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக பல மாநிலங்களில் கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் கடும் வெயில் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்