20 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை ரயிலில் அழைத்துவர பிஹார் அரசு திட்டம்

By செய்திப்பிரிவு

வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள சுமார் 20 லட்சம் தொழிலாளர்களை அழைத்துவர பிஹார் அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த சுமார் 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால் வெளி மாநிலங்களில் சிக்கிய பிற மாநில தொழிலாளர்கள் வேலை, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மாநில அரசுகள் ரயில்வே துறையுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

இதுகுறித்து பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறும்போது, “பிற மாநிலங்களில் சிக்கிய பிஹார் தொழிலாளர்களை அழைத்துவர ரயில்வே துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அழைத்துவர தினமும் 100 சிறப்பு ரயில்கள் வீதம் மொத்தம் 800 ரயில்கள் இயக்கப்படும்” என்றார்.

இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பிஹார் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பி உள்ளனர். இதில் கடந்த 18-ம் தேதி வரையில் 8,337 பேருக்கு பரிசோதனை செய்ததில் 8 சதவீதம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கு போதுமான வசதிகள் இல்லாததால் அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்