புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 1000 பேருந்துகள் என்று கூறிவிட்டு  கார், ஆட்டோரிக்‌ஷா, டூவீலர் நம்பர்களை கொடுப்பதா?- காங்கிரஸுக்கு உ.பி. அரசு கண்டனம்

By பிடிஐ

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப 1000 பேருந்துகளை இயக்க காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி முடிவெடுக்க அதன்படி 1000 பேருந்துகளின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை உத்தரப்பிரதேச அரசு கேட்டிருந்தது. ஆனால் இந்த எண்களில் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோரிக்சா எண்கள் இருந்ததாக உ.பி. அரசு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

ஆயிரம் பேருந்துகளையும் சரிப்பார்க்க வேண்டும் என்று உ.பி. அரசு கோரியதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது.

இந்நிலையில் உ.பி.துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா காங்கிரஸ் மீது கடுமையாகத் தாக்கிய போது, “காங்கிரஸ் ஊழல் செய்யப்பார்க்கிறது, தான் விரித்த ஏமாற்று வலையில் அதுவே வீழ்கிறது” என்று விமர்சித்தார்.

பிரியாங்கா காந்தி 1000 பஸ்களை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக விடப்போவதாக கூறியதுமே சர்ச்சை தொடங்கியது.

முதலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் காங்கிரஸின் இந்தத் திட்டத்தை ஏற்கவில்லை என்றும் இது தொடர்பாக தன்னை சந்திக்கவிருந்ததையும் கூட அவர் நிராகரித்ததாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

தொழிலாளர்களின் வேதனையில் காங்கிரஸ் அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டிய உ.பி. அரசு கடைசியில் வேறு வழியின்றி 1000 பஸ்கள் திட்டத்துக்கு ஒப்புக் கொண்டது. பஸ்களின் பட்டியல், அதன் ஓட்டுநர், நடத்துனர் விவரங்களையும் கேட்டது.

ஆனால் அத்துடன் முடிந்ததா பிரச்சினை? இல்லை. நேற்று காலை11.40 மணியள்வில் பிரியங்கா காந்தியின் அந்தரங்க காரியதரிசிக்கு ஒரு இ-மெயில் வந்தது. இதில் இன்று காலை 10 மணிக்கு அனைத்து பஸ்களையும் தங்கள் பார்வைக்கு லக்னோவுக்கு அனுப்புமாறு உ.பி. அரசு கோரியிருந்ததாக காங்கிரஸ் கூறுகிறது

ஆனால் அவரது செயலர் உ.பி. அரசுக்கு காலி பஸ்களை லக்னோவுக்கு அனுப்புவது மனிதத்தன்மையற்றது ஏழைகளுக்கு எதிரான மனப்போக்கையே உறுதி செய்கிறது, ஆயிரக்கணக்கானோர் உ.பி எல்லையில் குவிந்திருக்கும் போது பஸ்களை காலியாக லக்னோவுக்கு வரசொல்வது நியாயமல்ல என்று அவர் எழுதிவிட்டார்.

”உங்கள் அரசின் உத்தரவு அரசியல் நோக்கம் கொண்டது, உங்கள் அரசு தொழிலாள சகோதர, சகோதரிகளுக்கு உதவுவதாக இல்லை” என்று சாடினார் அவர்.

இதற்கு உ.பி கூடுதல் முதன்மை ச்செயலர் அவனீஷ் அவாஸ்தி , பேருந்துகளை எல்லையிலேயே சரிபார்க்கிறோம் என்று பதிலளித்தார்.

இதற்காக 500 பேருந்துகளை கௌஷாம்பி மற்றும் சஹிபாபாத் பேருந்து நிலையங்களில் நிறுத்துமாறும் அங்கு காஜியாபாத் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் அதனை சரிபார்ப்பார் என்றும் கூறினார்.

மேலும் இன்னொரு 500 பேருந்துகளை கவுதம் புத் நகரில் நிறுத்துமாறும் உ.பி. அரசு கேட்டுக் கொண்டது.

பேருந்து ஓட்டுநர்களின் உரிமங்கள், உடற்தகுதி, காப்பீடு உள்ளிட்டவற்றை மேஜிஸ்ட்ரேட் செக் செய்வதாக ஏற்பாடு.

பிற்பாடு மாநில அரசு என்ன கூறியது என்றால் காங்கிரஸ் அனுப்பிய ஆயிரம் பேருந்துகள் பட்டியலில் ஆட்டோ ரிக்‌ஷாக்கள், இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவற்றின் ரெஜிஸ்டர் நம்பர்களும் இருந்ததாக காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியது.

முதல்வருக்கான ஊடக ஆலோசக்ர் மிருத்யுஞ்சய் குமார் கூறும்போது, ஆம்புலன்ஸ், கார், 3 சக்கர வாகனங்களின் ரெஜிஸ்டர் நம்பர்கள் பேருந்துகள் பட்டியலில் எப்படி இடம்பெறும் என்று கேள்வி எழுப்பினார், இது போன்ற விவரங்களை mParivahan என்ற செயலி பிட்டு வைத்து விடுமாம்.

உ.பி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் இது அபாண்டமானது, “1000 பேருந்துகள் இருக்கின்றன. சந்தேகம் இருந்தால் நேரடியாக செக் செய்து கொள்ளட்டும். ” என்றார்.

ஆனால் துணை முதல்வர் கேஷ்வ் பிரசாத் மவுரியா, காங்கிரஸைத் தாக்கும் போது, “இது பேருந்து ஊழலாகும் போபர்ஸ், 2ஜி, கோல்கேட், காமன்வெல்த் கேம்ஸ் அடுத்தபடியாக இப்போது இது.

தொழிலாளர்களை வைத்து காங்கிரஸ் கேளிக்கை புரிகிறது. பேருந்துகள் என்று கூறிவிட்டு அதில் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள் எண்களையெல்லாம் கொடுத்துள்ளது. பொய்களைக் கூறி மக்களை தவறாக வழிநடத்துவது காங்கிரஸின் டி.என்.ஏ.விலேயே இருக்கும் ஒன்று” என்று கடுமையாகத் தாக்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்