கோடை விடுமுறையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்: ஜூன் 19 வரை தொடரும் என அறிவிப்பு

By ஐஏஎன்எஸ்

உச்ச நீதிமன்றம் தனது கோடை விடுமுறையை ரத்து செய்து ஜூன் 19 வரை தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுநோயின் பின்னணியில் உச்சநீதிமன்றம், மார்ச் 24 முதல், வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறது, அதில் மிகவும் அவசரமான வழக்குகளுக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் முன்னுரிமை அளித்தது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே வெள்ளிக்கிழமை ஒரு முழு நீதிமன்றக் கூட்டத்தை நடத்தினார், அதில் கோடை விடுமுறையில் தொடர்ந்து பணியாற்றப்பட உள்ளதாக ஒருமித்த முடிவு எட்டப்பட்டது.

இதுகுறித்து உச்ச நீதிமன்ற நிர்வாகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

"அக்டோபர் 14, 2019, உச்ச நீதிமன்ற விடுமுறைகள் 2020 மற்றும் நீதிமன்றத்தின் கோடை விடுமுறை உள்ளிட்ட அறிவிப்பிக்கப்பட்ட பகுதியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறை குறித்த புதிய பட்டியலை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதன்படி உச்சநீதிமன்ற காலண்டர் 2020 இன் கோடை விடுமுறை மறுபரிசீலனை செய்யப்பட்டு ,மே 18 முதல் ஜூன் 19 வரையிலான ஐந்து வார காலமும் (இரண்டு நாட்களும் உள்ளடக்கியது) செயல்படும் காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது,

நிலுவையில் உள்ள அனைத்து வகையான மற்றும் புதிய வழக்குகளையும் எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது, இது விடுமுறை காலத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கப்பட வேண்டிய அவசர வழக்குகளையும் உள்ளடக்கும்.

இவ்வாறு உச்ச நீதிமன்ற நிர்வாகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகளுடன் கலந்தாலோசித்து, கோவிட் -19 பாதிப்பு தொடர்பான நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பார். கோடை விடுமுறை வேண்டாம் என்று தற்போதுஎடுக்கப்பட்ட முடிவை அவர் மறுபரிசீலனை செய்யலாம்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்