மே 4-ம் தேதி முதல் தொழிற்சாலைகள் திறப்பு: கர்நாடக அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

கர்நாடகாவில் மே 4-ம் தேதி முதல் கரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் தொழிற்சாலைகளில் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊர டங்கு தொடர்பாகவும் மாநிலங் களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் தேதிகளிலும் ஆலோசனை நடத்தினார். முதல்வர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கடந்த 14-ம் தேதி மோடி அறிவித்தார். கடந்த 20-ம் தேதி முதல் பல்வேறு துறைகள் செயல்படவும், கடைகள், அலுவலகங்கள், குறிப்பிட்ட சில ஆலைகள் இயங்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் மீண்டும் ஆலோசனை நடத்தினார். அப்போது சில மாநில முதல்வர்கள் கரோனா ஊரடங்கை தொடரவும், சிலர் தளர்த்தவும் வலியுறுத்தினர்.

இதனால் கரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் மே 3-ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் கர்நாடகாவில் மே 4-ம் தேதி முதல் கரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் தொழிற்சாலைகளில் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் கரோனா பாதிப்பு ஒரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாலும், குறிப்பிட்ட சில பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் கரோனா நோயாளிகள் ஒரளவு குறைந்துள்ளனர். இதையடுத்து பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடங்க அனுமதி அளித்துள்ளது. எனினும் கரோனா பாதிப்புள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடரும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

வர்த்தக உலகம்

24 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்