கரோனா வைரஸ் கழிவுகள் அழிப்பு: மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் கழிவுகள் அறிவியல்பூர்வமாக அழிக்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், “கரோனா வைரஸ் மருத்துவக் கழிவுகளை பாதுகாப்புடன் வைத்திருப்பது, அவற்றை அழிப்பது ஆகியவற்றை உயிரி மருத்துவக் கழிவுகளை கையாளும் விதிகளின்படி செயல்படுத்த வேண்டும். வைரஸ் கழிவுகள் அறிவியல் ரீதியாக அழிக்கப்படுகிறதா என்பதை மத்திய அரசின் குழுவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் கண்காணித்து அதை உறுதிப்படுத்த வேண்டும்.

கரோனா வைரஸ் கழிவுகளை முறையற்ற வகையில் கையாண்டாலோ அல்லது சரியாக அழிக்காமல் விட்டாலோ சுற்றுச்சூழலுக்கும் மக்களின் சுகாதாரத்துக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கும். எனவே, வைரஸ் கழிவுகள் அறிவியல் ரீதியில் அழிக்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல விதிமுறைகளை பின்பற்றுமாறு மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

வணிகம்

37 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்