பிரதமர் மோடியின் உரையை 20 கோடி பேர் பார்த்தனர்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு மற்றும்
கரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இதுவரை 4 முறை தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

4-வது முறையாக கடந்த 14-ம் தேதி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் மீண்டும் உரையாற்றினார். அப்போது, 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் மோடி அறிவித்தார்.

கடந்த 14-ம் தேதி 4-வது முறையாக பிரதமர் மோடி ஆற்றிய தொலைக்காட்சி உரைபுதிய சாதனையை படைத்துள்ளது. அவரது இந்த 25 நிமிட உரையை நாடு முழுவதும் 20 கோடியே 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த தகவலை ஒளிபரப்பு நேயர்கள் ஆராய்ச்சி கவுன்சில் (பிஏஆர்சி) தலைமை நிர்வாகி சுனில் லல்லா தெரிவித்துள்ளார்.

மேலும், கரோனா வைரஸுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் குறித்த செய்திகளை கூகுள் இணையதளத்தில் தேடியிருப்பதாவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்