இன்று காலை 10 மணிக்கு பிரதமர் உரையாற்றுகிறார்

By செய்திப்பிரிவு

பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது, நாடுதழுவிய ஊரடங்கு நீட்டிப்பு குறித்துஅறிவிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மாதம் 24-ம்தேதி நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். இன்றுடன் ஊரடங்கு முடிகிறது.எனினும், கடந்த சனிக்கிழமையன்று பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுடன் காணொலிக் காட்சி மூலம் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒடிசா, பஞ்சாப், மேற்குவங்கம், தெலங்கானா உட்பட சில மாநிலங்கள் வரும் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளன. தமிழகத்திலும் 30-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனி சாமி நேற்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இன்று காலை 10 மணிக்குபிரதமர் மோடி உரையாற்றுகிறார். அப்போது, பல்வேறு மாநில முதல்வர்களின் கோரிக்கைப்படி நாடு தழுவிய அளவில் ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிடுவார் என்றுதெரிகிறது. மேலும், பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருக்க கரோனா வைரஸ் பாதிப்பு அளவைப் பொறுத்து சில விதிவிலக்கு மற்றும் தளர்வுகளும் அறிவிக் கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, வியட்நாம் பிரதமர் நேயென் ஜூவானுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போதுவைரஸை தடுப்பது பற்றியும் இதுதொடர்பாக இரு நாடுகளும்இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இரு நாட்டு அதிகாரி களும் வரும் நாட்களில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் மருத்துவ உபகரணங்களை அனுப்புவதற்கும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மத்திய வெளியுறவு அமைச்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்