கரோனா தடுப்பு: ஆல்கஹால் கலக்காத கிருமி நாசினி தயாரிப்பு; மத்திய அரசு நிதியுதவி

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் உணவு, வேளாண்மை மற்றும் உயிர்-தொழில்நுட்பவியல் தொடர்பான செயல்களில் ஈடுபட்டு வரும் கிரீன் பிரமிட் பயோடெக் (GPB) நிறுவனத்துக்கு இயற்கையான, ஆல்கஹால் கலக்காத கிருமி நாசினியைத் தயாரிக்க மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத்துறை (DST) நிதியுதவி வழங்குகிறது.

இந்தக் கிருமி நாசினியைக் கொண்டு கைகள் மற்றும் பொருள்களின் மேற்பரப்புகளைச் சுத்தம் செய்தால் பாக்டீரியா மற்றும் வைரசுக்கு எதிரான பாதுகாப்பு நீண்ட நேரம் நீடித்து இருக்கும். இந்தக் கிருமி நாசினியானது இந்தியாவின் கரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

இந்த நோய் தொற்றுநோயாக இருப்பதால் கைகளைக் கழுவுதல், மேசை, கம்ப்யூட்டர், நாற்காலி, மொபைல் ஃபோன் மற்றும் பூட்டுக்கள் போன்ற அடிக்கடி பயன்படுத்தும் பொருள்களின் மேற்பரப்புகளை சுத்தம் செய்தல் ஆகியவை மிக முக்கியமானவை ஆகும். இவ்வாறு செய்தால் தான் நம்மால் தொற்றின் வேகத்தைக் குறைக்க முடியும்.

இந்தக் கிருமி நாசினிக்கான உருவாக்கக் கலவை திட்டத்தை (Formulation) கிரீன் பிரமிட் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதில் உள்ள செயலூக்கமான மருந்து மூலப்பொருள் (API) என்பது உயிர்-புறப்பரப்பு செயலியாகும்.

இது பாக்டீரியா மற்றும் வைரசுகளிடம் இருந்து நீண்ட நேரம் பாதுகாப்பு அளிப்பதோடு தொற்று ஏற்படக்கூடிய ஆபத்துக் காரணியை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கக் கூடியதாகவும் இருக்கிறது. நோயுண்டாக்கும் பல்வேறு வகையான பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஈஸ்ட் போன்றவற்றிற்கு எதிராக இந்த கிருமி நாசினி பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

54 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்