கரோனா வைரஸ் தொற்றால் ஆந்திராவில் 266 பேர் பாதிப்பு

By என்.மகேஷ்குமார்

ஆந்திராவில் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கடந்த மாதம் 29-ம்தேதி 49 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் பரவி இருந்தது. ஆனால் ஒரே வாரத்தில், அதாவது ஞாயிற்றுக்கிழமை நோயாளிகள் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் நேற்று காலை 9 மணிக்குள் மேலும் 14 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. விசாகப்பட்டினம் 5, அனந்தபூர் 3, கர்னூல் 3, குண்டூர் 2, மேற்கு கோதாவரி 1 என 5 மாவட்டங்களில் இவர் களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் நோயாளிகள் எண்ணிக்கை நேற்று காலையில் 266 ஆக உயர்ந்தது. ஆந்திராவில் கரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

தெலங்கானாவில் 334 ஆனது

தெலங்கானா மாநிலத்தில் இருந்து டெல்லி நிஜாமுதீன் மத மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் 1,038 பேர் என தெரியவந்தது. இவர்களில் பலருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவதால், நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மதிய நிலவரப்படி இம்மாநிலத்தில் 334 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்குஇதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

12 mins ago

உலகம்

10 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

23 mins ago

சினிமா

29 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

54 mins ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்