கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நாட்டில் 245 ரயில்கள் ரத்து

By பிடிஐ

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு மேலும் 90 ரயில்களை ரயில்வே ரத்து செய்தது; இதனை அடுத்து ரத்து செய்யப்பட்ட மொத்த ரயில்களின் எண்ணிக்கை 245 ஆக உயர்கிறது.

இந்தியாவில் கரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளன. கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி வரும் மார்ச் 22 ஞாயிறு அன்று ஜனதா ஊரடங்கு உத்தரவிற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக ரயில்வே துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அடுத்த இரண்டு வாரத்திற்கு ரயில்களின் எண்ணிக்கை கடுமையாக குறைத்து கரோனா பரவாமல் தடுக்க கிட்டத்தட்ட ரயில் போக்குவரத்தை நிறுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து இந்திய ரயில்வேத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வியாழக்கிழமை, ரயில்வே 84 ரயில்களை ரத்து செய்ததை அடுத்து ரத்து செய்ப்பட்ட ரயில்களின் எண்ணிக்கை 155 ரயில்கள் ஆக இருந்தது. வெள்ளிக்கிழமை மேலும் 90 ரயில்களை இந்திய ரயில்வேத்துறை ரத்து செய்தது. இதனை அடுத்து கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை ரத்து செய்யப்பட்ட மொத்த ரயில்களின் எண்ணிக்கை 245 ஆக உயர்கிறது.

இந்த ரயில்களில் டிக்கெட் வைத்திருக்கும் அனைத்து பயணிகளும் 100 சதவீத பணத்தைத் திரும்பப் பெறுவார்கள். ரயில்வே பெரும் வருவாய் ஈட்டும்போது, ​​மக்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளாத வகையில் ரயில்களை ரத்து செய்வது அவசியம். சமூக இடைவெளி உறுதி செய்யப்படுவதை உறுதி செய்வது மிகமிக அவசியம், என்று கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

விளையாட்டு

45 mins ago

தமிழகம்

45 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

உலகம்

2 hours ago

மேலும்